சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிாியாவில் அரசுக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக கிளா்ச்சியார்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் பாேரால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும், கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவாக அமொிக்க படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தீவிரவாத குழுக்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன்.

இந்நிலையில், சிரியாவில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தாலிபான் இயக்கத்தினர் மீது அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு இத்லிப் மாகாணத்தில் சர்மதா என்ற இடத்துக்கு அருகே கடந்த 18-ந் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அல் மாஸ்ரி உயிாிழந்ததாக கூறப்படுகிறது.

அல் மாஸ்ரி கொல்லப்பட்டதை பென்டகன் அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் வெளியிட்டார். அப்போது, தென்மேற்கு ஆசியா முழுவதும் உள்ள தீவிரவாத குழுக்களுடன் அல் மாஸ்ரிக்கு தொடர்பு உள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலும், மேற்கத்திய நாடுகளில் தாக்குதல்கள் நடத்தி வந்த குழுக்களிலும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அல் மாஸ்ரி தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது, அல் கொய்தா மற்றும் சிரிய பயங்கரவாத குழுக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என தெரிவித்தார்.
