துப்பாக்கி சூட்டில் 20 பள்ளி மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியர்.. குவியும் பாராட்டுக்கள் !!
பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனை சுட்டுக் கொன்றான்.அப்போது அங்கிருந்த ஆந்திரப் பிரதேச ஆசிரியர் ஒருவர் 20 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு :
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அடிக்கடி நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள டாங்கிள்வுட் நடுநிலைப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனை சுட்டுக் கொன்றான்.அப்போது அங்கிருந்த ஆந்திரப் பிரதேச ஆசிரியர் ஒருவர் 20 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்த சம்பவம் வைரலாகி உள்ளது. அந்த ஆசிரியர் பெயர் ஸ்ரீதர் ஆகும். ஆந்திரா மாநிலம், மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மாணவன் பெயர் ஜமாரி கோர்டெஸ் போனபார்டே ஜாக்சன் ஆகும். இந்த சிறுவனின் வயது 12 ஆகும்.
மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் :
இதுபற்றி பேசிய ஸ்ரீதர், ‘வகுப்புகள் மாறியபோதுதான் துப்பாக்கிச்சூடு நடந்தது. குறிப்பாக மதியம் 12.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது’ என்று கூறினார். 20க்கும் மேற்பட்ட மாணவர்களை விரைவாக ஒரு வகுப்பறைக்குள் விரைந்த ஸ்ரீதர், தாக்கியவர் உள்ளே செல்ல முடியாதபடி பெஞ்சுகளால் கதவைத் தடுத்தார்.
ஆசிரியர் ஸ்ரீதரைப் போலவே, பல ஆசிரியர்களும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களை நடைபாதையிலிருந்து வகுப்பறைகளுக்குள் அடைத்து காப்பாற்றினர். பின்னர் அங்கு வந்த போலீசார் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.