Asianet News TamilAsianet News Tamil

கட்டுப்பாடில்லாத கொரோனா..! மீண்டும் சீனாவை குற்றம் சாற்றும் ட்ரம்ப்..!

சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது என்ற ட்ரம்ப் அதில் சிலர் வருத்தப்படுவதை தான் அறிந்திருப்பதாகவும் கூறினார்.

again trump blamed china for corona affection
Author
America City, First Published Mar 22, 2020, 9:56 AM IST

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  அங்கு 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியான நிலையில் அங்கு தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா மற்ற நாடுகளில் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்து 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

again trump blamed china for corona affection

அமெரிக்காவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வீரியம் அதிகரித்திருப்பதன் காரணம் சீனா தான் அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். கொரோனா வைரஸ் குறித்து மற்ற நாடுகளிடம்  சீனா பகிர்ந்து கொள்ளாமல் போனதாலேயே அதற்கான விலையை தற்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

வீடுகளில் முடங்கிய மக்கள்..! வெறிச்சோடிய வீதிகள்..! தொடங்கியது சுய ஊரடங்கு..!

again trump blamed china for corona affection

அதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது.இந்தநிலையில் கொரோனா பாதிப்பிற்கு சீனா தான் காரணம் என ட்ரம்ப் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது என்ற ட்ரம்ப் அதில் சிலர் வருத்தப்படுவதை தான் அறிந்திருப்பதாகவும் கூறினார். மேலும் சீனாவுடன் தனக்கு நல்லுறவு உள்ளது என்றும் சீனா மீதும் அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் மீதும் தான் மதிப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios