இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள புகோடா என்ற பகுதியில் இருக்கும் நீதிமன்றம் அருகே இன்று காலை வெடிகுண்டு வெடித்ததால் மீண்டும் அங்கு பதட்டம் நிலவுகிறதும்.

இலங்கை, தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஈஸ்டர் தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, குண்டு வெடிப்பில், இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும்படியான நபர்கள்  54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று காவல்துறை மீண்டும் தீவிர சோதனைகளை வருகிறது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 10 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதில் 8 இடங்களில் குண்டுகள் வெடித்து உயிர்பலியானது. இலங்கையில் மக்கள் கூடும், இன்னும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இதையடுத்து கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பு அருகே உள்ள புகோடா என்ற பகுதியில் இருக்கும் நீதிமன்றம் அருகே இன்று காலை வெடிகுண்டு வெடித்ததால் மீண்டும் அங்கு பதட்டம் நிலவுகிறதும். இந்த குண்டுவெடிப்பில் சேதம் பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.