hindu temple in pakistan: பாகிஸ்தானில் 1200 ஆண்டுகால இந்து கோயில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு
பாகிஸ்தானின் லூகார் நகரில் கடந்த 1200 ஆண்டு பழமை வாய்ந்த இந்துக் கோயில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து நீண்ட சட்டப்போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டது. விரைவில் இந்தக் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானின் லூகார் நகரில் கடந்த 1200 ஆண்டு பழமை வாய்ந்த இந்துக் கோயில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து நீண்ட சட்டப்போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டது. விரைவில் இந்தக் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட உள்ளது.
லாகூர் நகரில் உள்ள அனார்கலி பஜார் பகுதியில் 1200 ஆண்டுகால வால்மீகி கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மீட்பு சொத்துகள் அறக்கட்டளை வாரியம் கடந்த மாதம் கோயிலே தங்கள் பொறுப்பில் எடுத்தது.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர், தற்போது இந்துக்களாக மதம் மாறிவிட்டோம், கடந்த 20 ஆண்டுகளாக கோயிலை தாங்கள்தான் நிர்வகித்து வருவதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒரு நபர் கமிஷனை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. அந்த விசாரணையின் முடிவில் கோயில் அரசுக்கு உரியது, கோயிலை புனரமைப்பது அவசியம் எனப்பரிந்துரை செய்தது.
இதுகுறித்து மீட்பு சொத்துகள் அறக்கட்டளை வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் அமிர் ஹஸ்மி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் “ வால்மீகி கோயில் விரைவில் புனரமைக்கப்படும். இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவத்தலைவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இன்று கோயிலில் கூடி பூஜைகள் செய்தனர், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டபின் முதல் முறையாக லாங்கர் உணவு வழங்கப்பட்டது.
சீனா எதிர்த்தாலும் தைவானைக் கைவிடமாட்டோம்: நெருப்பில் எண்ணெய் வார்த்த நான்சி பெலோசி
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக கோயிலை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.அவர்களிடம் இருந்து கடந்த மாதம்தான் அரசு கோயிலை மீட்டது. ஆனால், 2010-11ம் ஆண்டுதான் கோயிலுக்கு உரிமையாளர்களாக அந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர் பதிவு செய்தனர். இந்த கோயில் வால்மீகி இந்துக்களுக்கு மட்டுமே உரியது. கிறிஸ்தவக் குடும்பத்தினர் வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை, மீண்டும் அரசிடமே ஒப்படைக்க உத்தரவிட்டது” எனத் தெரிவித்தார்.
கடந்த 1992ம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, லாகூரில் வால்மீகி கோயில், கிருஷ்ணன் கோயிலும் இடித்து சேதப்படுத்தப்பட்டது. வால்மீகி, கிருஷ்ணர் சிலைகள் நொறுக்கப்பட்டன. சமையல் பாத்திரங்கள், பொருட்கள், நகைகள், சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. கோயிலுக்கும் தீ வைக்கப்பட்டது.
‘இந்த பூச்சாண்டிதனத்துக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்’: சீனாவுக்கு தைவான் அதிபர் பதிலடி
இந்த தீவிபத்தில் கோயிலுக்கு அருகே இருந்த பல கடைகளும் எரிந்து சாம்பலாகின என்பது குறிப்பிடத்தக்கது. லாகூர் நகரில் இந்துக்கள் வழிபாடு செய்ய ஒரே ஒரு கிருஷ்ணர் கோயிலும், வால்மீகி கோயில் மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக 200 குருதுவாராக்கள், 150 கோயில்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.