தேர்தலில் தோல்வி... டிரம்பை கழட்டிவிட முடிவு செய்த இளம் மனைவி மெலானியா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்த டிரம்பை அவரது மனைவி மெலானியா விவகாரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்த டிரம்பை அவரது மனைவி மெலானியா விவகாரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியை தொடரலாம் என நம்பியிருந்த டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் ஏமாற்றத்தை தந்துள்ளனர். ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் டிரம்ப் தோற்றதால், அவருடைய வாழ்க்கையிலும் புயல் வீசுகிறது. டிரம்ப்பின் மனைவி மெலானியா. இவர், டிரம்ப்புக்கு 3வது மனைவி. இருவருக்கும் 25 வயது வித்தியாசம். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா விவகாரத்து செய்து விடுவார் என்று அவருடைய உதவியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
டிரம்ப் அதிபராக இருக்கும்போது, இந்த காரியத்தை செய்தால் அவருக்கு அவமானம் ஏற்படும் என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் தன்னை அழித்து விடுவார் என்றும் பயந்ததால்தான், நல்ல தருணத்துக்காக மெலனியா காத்திருந்தாக அவர்கள் மேலும் கூறினர். ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.