ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழப்பு.. பலர் ரத்த வெள்ளத்தில் படுகாயம்!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, அந்நாட்டில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.