ஆப்கனில் பகீர்…! மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு…..! 100 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டின் குண்டுஸ் நகரில் ஷியா சமுகத்தினர் பயன்படுத்தம் மசூதியில் குண்டுவெடித்தது. தொழுகையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பில் ஷியா மத சிறுபான்மையினர் வழிபாட்டின் போது குண்டு வெடித்ததாகவும், பலர் உயிரிழந்துவிட்டதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பலர் காயம் அடைந்துள்ளனர், தாலிபான் சிறப்பு படையினர் வந்துள்ளதாகவும் விசாரணை தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
குண்டுவெடிப்பான காரணமும் தெரியவில்லை. இது வரை இந்த சம்பவத்துக்கு எந்த இயக்கமும், அமைப்போ பொறுப்பேற்கவில்லை.