அடி தூள்.. ரத்தம் சொட்ட சொட்ட தலிபான்களை அடித்து விரட்டிய ஆப்கன் மக்கள்.. உருவானது எதிர்ப்பு படை.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே , நாட்டின் தற்காலிகத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி உள்ளார்.
ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபன்கள் வசம் விழுந்ததாக கூறப்படுவதுடன், விரைவில் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தலிபான்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு படை ஆப்கானிஸ்தானில் உள்ள பொல் - இ - ஹேசர், தே சலா மற்றும் பானு ஆகிய மூன்று மாவட்டங்களை கைப்பற்றி உள்ளதாகவும், இந்த எதிர் தாக்குதலில் பல தலிபான்கள் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய உடன் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தாலிபன்கள் ஆட்சியின்கீழ் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகள் ஆப்கனில் உள்ள தூதரகங்களை மூடிவிட்டு தங்களது ஊழியர்களை நாட்டிற்கே திரும்ப அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை என்றும், ஆப்கன் மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது என்றும் மக்கள் இங்கு அச்சமின்றி வாழலாம் என்றும் ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆனாலும் அவர்களின் இந்த அறிவிப்பை மக்கள் நம்பத் தயாராக இல்லை, அதற்கு ஏற்றாற் போலவே தலிபான்களும் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களை பாதுகாப்போம் என கூறிவிட்டு மக்களை மிக மோசமாக தலிபான்கள் நடத்தி வருவதாக கூறி, கைர் முகமது அந்தராபியின் தலைமையில் ஆப்கன் பொதுமக்கள் எதிர்ப்பு படை அமைத்து, தலிபான்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் ஆப்கானிஸ்தானின் பாக்லானில் உள்ள பொல் - இ - ஹேசர், தே சலா மற்றும் பானு மாவட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தாலிபன்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த தாக்குதலின் போது பல தலிபான்கள் காயமடைந்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் ஆப்கனிஸ்தான் செய்தி நிறுவனம் அஸ்வாகா தெரிவித்துள்ளது.அதில் குறைந்தது 60 தலிபான்கள் காயமடைந்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் பல மாவட்டங்களில் நோக்கி முன்னேற போவதாகவும் மக்கள் படை அறிவித்துள்ளது. தலிபான்கள் பொதுமன்னிப்பு அறிவித்தனர், ஆனால் அதன்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றும் அந்த படி தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மாவட்டங்கள் காபூலுக்கு வடக்கேயும், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்குக்கு அருகிலும் உள்ளன. இது பஞ்சாஷர் பள்ளத்தாக்கில் இருந்து இந்த மக்கள் படை தலிபான்களுக்கு எதிராக திரட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே , நாட்டின் தற்காலிகத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி உள்ளார். கொல்லப்பட்ட தலிபான் எதிர்ப்பு தலைவர் அகமது ஷா மசூத்தின் மகனே அகமது மசூத் ஆவார் இவர் திலிபான் எதிர்ப்புப் படைகளின் தளபதியாகக் கருதப்படுகிறார். சில ஆதாரங்களின்படி, தலிபான் பிரதிநிதிகள் அகமது மசூத்தை விரைவில் சந்தித்த பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் எற தகவல்கள் வெளியாகி உள்ளது.