அமெரிக்க சட்டப்படி, தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால்... ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிப்பு..!
தலிபான் அமைப்புகள், ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
தலிபான் அமைப்புகள், ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ அமெரிக்க சட்டங்களின்படி தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆபத்தான அமைப்புகள் என்ற கொள்கையின் கீழ் ஃபேபுக் சேவைகள் தடை, தலிபான் ஆதரவாக செயல்படுவோர்களின் ஃபேபுக் கணக்குகளும் பதிவுகளும் நீக்கும் பணியை தொடங்கி இருக்கிறோம்’’ என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 ஃபேஸ்புக் வலைதள கணக்குகளை உளவுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த 5 வலைதள கணக்குகளை தலா ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த ஐந்து வலைதளக் கணக்குகளும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை பெருமளவு கொண்டாடி வருகின்றன. ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த 5 வலைதளக்கணக்குகளையும் தமிழக உளவுத்துறையினர் மத்திய உளவுத்துறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து இது குறித்து விசாரிக்குமாறு தமிழகத்தில் உள்ள உளவுத்துறை படைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்த ஆதரவாளர்கள், தலிபான்களுக்கு ஏதேனும் வகையில் உதவுகிறார்களா என்பது குறித்தும் விசாரித்து ஆய்வு அறிக்கையை அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார்கள்.