Russia Ukraine Crisis :எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் தஞ்சம் தர தயார்..உக்ரைனுக்கு அண்டை நாடு ஆதரவு..
ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயாராக இருப்பதாக அண்டை நாடான மால்டோவா அறிவித்துள்ளது. மேலும் எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என்று மால்டோவா அதிபர் மையா சாண்டு அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள்,குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ”உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை” என்று ரஷ்யா தெரிவித்தது.மேலும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தலைநகர் கீவ்-வில் தொடர் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் உருவாக்கியுள்ளது. மெட்ரோ நிலையங்கள்,சுரங்க பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.தங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ரஷ்ய இராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.குண்டு மழைகளை பொழிந்து வரும் நிலையில்,அந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், பதற்றம் அடைய வேண்டாம் என்று இந்திய அரசு தூதரகம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்களையும் அறிவித்துள்ளது.