இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

23 அடி மலைப்பாம்பு

சடலம் 23 அடி மலைப்பாம்பு வயிற்றை கிழித்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உள்ளனர் ஊர் மக்கள்.

இந்தோனேஷியாவில் உள்ள முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா.இவருக்கு வயது 54. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

இந்நிலையில் தீபா, அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அருகில் வந்த  மலைப்பாம்பு தீபாவின் தலையை முதலில் பிடித்துள்ளது.

பின்னர் உடல் முழுவதும் அப்படியே விழுங்கி உள்ளது. இது தெரியாமல் தீபாவை தேடி வந்த மக்கள், ஒரு  கட்டத்தில் அங்கிருந்த மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் தவித்து வருவதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர்.

பின்னர், அருகில் தீவா அணிந்திருந்த செருப்பு ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் சந்தேகத்தின் பேரில் மலைப்பாம்பை பிடித்து, வயிற்ரை கொஞ்சமாக  அறுத்து பார்த்துள்ளனர்.

அப்போது தான் தெரிய வந்துள்ளது தீபாவை பாம்பு விழுங்கியுள்ளது என்பது....பின்னர் அந்த பாம்பின் உடலை கிழித்து, தீபாவின் உடலை மீட்டு உள்ளனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் மலைப்பாம்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.