ரஷ்யாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு சாலையில், விலையுயர்ந்த கார் ஒன்றில் வந்த இளைஞர் கத்தை கத்தையாக பணத்தை வீசி எறிந்துள்ளார். இதனை பார்த்த மக்கள் பெரும் இன்ப அதிர்சிக்கு ஆளாகி   உள்ளனர்.

ரஷ்யாவிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள மமிகவும் பிரபலமான சாலை ஒன்றில் ரஷ்யாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் சாலை முழுவதும் பணத்தை வீசி எறிந்தவாறே சென்று உள்ளார். 

மேலும் ஒரு மனிதன் இந்த பணத்திற்காகத்தான் வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்படுகிறான் என அவர்  உற்சாகமாக தெரிவித்து உள்ளார். அவரிடம் இவ்வளவு பணம் இருப்பதை மிக எளிதாக எடுத்துக் கொள்ளும் அவரின் மனப்பான்மையை பார்த்து ஒரு சிலருக்கு கோபம் வந்து விட்டது. ஒரு சிலரோ இவர்  நல்ல மனிதர்  அதனால் தான் இவ்வளவு பணத்தை தாராளமாக மக்களுக்கு தருகிறார் என கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இதற்கு முன்னதாக இவரின் கார்  ஒரு பள்ளத்தில் மாட்டிக்கொண்ட போது, அதனை எடுக்க, கார் சக்கரத்தில் பணத்தை வைத்து காரை மீட்டு வெளியே எடுத்த அதிர்ச்சி வீடியோவை ஏற்கனவே  அவர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது