பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரின் மூளையை சாப்பிட்ட வழக்கில்  21 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர் பிலிப்பைன்ஸ் நாட்டின்  லாயிட் பாக்டோங் என்ற 21 வயதான நபர் ஒரு பெண்ணை தோட்ட வேலை செய்ய பயன்படுத்தும் கருவியால் தலையில் அடித்து கொலை செய்ததுடன்,  அந்தப்  பெண்ணின் தலையை வீட்டுக்கு கொண்டு சென்று மூளையை எடுத்து  சாப்பிட்டதாக எழுந்த சந்தேகத்தில்  போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். 

அடையாளம் தெரியாத  பெண் ஒருவரின் சடலத்தை  லாயிட் பாக்டோங்  வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  லாயிட் பாக்டோங்கை  கைது செய்து  போலீசார் விசாரணை நடத்தினர், அதில் தனக்கு வேலை எதும் இல்லை என்றும்   விரக்தியில் இருந்த தம்மிடம் அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேசியதாகவும்,  அவர் என்ன சொல்ல வருகிறார்  என்பது தனக்கு புரியவில்லை என்றும்,  அத்துடன் போதையில் பசியுடன் இருந்த தமக்கு அந்தப் பெண்ணை  பேசியது  எரிச்சலை ஏற்பட்டதாகத் தெரிவித்த  பாக்டோங்,  அவரை அருகிலிருந்த தோட்ட வேலை செய்யும் கருவியால்  தலையில் தாக்கி கொன்றதாக தெரிவித்தார் . 

 

அத்துடன் அந்தப் பெண் இடுப்பில் கட்டியிருந்த துணியை கொண்டு அந்தப் பெண்ணை  தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு,  அவரது கழுத்தை அறுத்து  அந்த பெண்ணின் தலையை வீட்டிற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார்,  அவரது மூளையை எடுத்து அரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் அந்தப் பெண்ணின் மண்டையோட்டை பாக்டோங் தங்கியுள்ள இடத்தில் உள்ள ஒரு குப்பை பள்ளத்திலிருந்து போலீசார் மீட்டுள்ளனர்.  கைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த பெண்ணின்  மீத உடற்க்கைப்பற்றப் பட்டுள்ளது.   இந்நிலையில் பாக்டோங்கை மனநல மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.  அத்துடன் அந்தப் பெண் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.