காதலியை 7 துண்டுகளாக வெட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்; இதுவா காரணம்?
தைவான் நாட்டில் உள்ள பேன்கியோ என்னும் பகுதியில் நடைபெற்றிருக்கும், கொலைச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கேரி சூ எனும் குத்துச்சண்டை பயிற்சியாளரும், யீ மின் ஹீவாங் எனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கின்றனர்.
கேரிக்கு தனது காதலியான ஹீவாங்-ன் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சந்தேகம் முற்றிய நிலையில், அவர் தனது காதலியை கொன்று, ஏழு துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, அருகில் உள்ள பார்க்கில் புதைத்திருக்கிறார்.
ஹீவாங்கை சில நாட்களாக காணாததால் அவரது சகோதரர் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் போலீசார் ஹீவாங் பற்றி விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது ஹீவாங் தங்கி இருந்த ப்ளாட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தபோது, அதில் கேரி பிளாஸ்டிக் பைகளுடன் வெளியேறிய காட்சி கிடைத்தது.
அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த 7 பைகளையும் பார்க்கில் இருந்து கண்டு எடுத்திருக்கின்றனர் போலீசார். அதன் பிறகு கேரியை கைது செய்ய அவரது இருப்பிடத்திற்கு சென்றபோது, அங்கு அவர் நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்ன? என்பதை எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.