குளியல் தொட்டி முழுவதும் பல வருடங்களாக நாணயங்களை மட்டும் சேர்த்து வைத்து வந்த ரஷ்ய  இளைஞர் ஒருவர், ஆப்பிள் ஐபோன் வாங்கி அசத்தி உள்ளார். 

மாஸ்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர், apple i phone வாங்குவதற்காக நாணயங்களை சேகரிக்கும் முடிவை  எடுத்து உள்ளார். இதற்காக அவருடைய நண்பர்கள் உதவியுடன் குளியல் தொட்டியில் நாணயங்களை சேகரித்து வந்துள்ளார். 


  
பின்னர், பின்னர் ஆப்பிள் ஐ.போன் வாங்குவதற்கு தேவையான நாணயங்கள் சேகரித்த பிறகு அந்த குளியல் தொட்டியை அப்படியே வாகனம் மூலம் ஷோ ரூமிற்கு எடுத்து வந்துள்ளார். அவரை பார்த்த உடன் யார் இது..? இப்படி செய்கிறாரே என முதலில் அவரை ஷோ ரூமிற்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியவர்கள், பின்னர் அவர் ஐ போன் வாங்க வந்திருப்பதாக கூறிய பின் அவரை உள்ளே அனுமதித்து உள்ளனர்.

இந்த ருசிகர சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.