தமிழனாக மாறிய கனடா பிரதமர்... நானும் தமிழன்டா என மார் தட்டும் ஜஸ்டின் த்ருதயூ...

a great time celebrating Tamil Heritage Month and Thai Pongal says Justin Trudeau
a great time celebrating Tamil Heritage Month and Thai Pongal says Justin Trudeau


கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதயூ தமிழக மக்களுடன் சேர்ந்து பொங்கல் திருநாளை கொண்டாடினார். பட்டு வேஷ்டியை அணிந்து பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.

பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் தமிழக மக்கள் பரவி உள்ளார்கள் அல்லவா அவர்கள் எங்கிருந்தாலும்  பொங்கல் திருநாளை, அவர்கள் வாழ்வில் சந்திக்கும் சிறந்த திருநாளாக கருதி, இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சிறப்பாக கொண்டாடுவர்.

a great time celebrating Tamil Heritage Month and Thai Pongal says Justin Trudeau

பட்டு வேட்டி சட்டை என்ன ? சேலை அணிந்த தேவதைகள் எங்கே....?

பொங்கல் திருநாள் என்றாலே அன்றைய தினம், ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் குடும்பத்துடன் பொங்கலிட்டு மகிழ்வர்.

“கனடா பிரதமர்”

பொங்கல் திருநாளின் முக்கியத்துவம் தமிழ்நாடு மட்டுமில்லை...இந்தியா  மட்டுமில்லை...உலகமே உணர்ந்துள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக, கனடாவில்  வசிக்கும் தமிழ் மக்களோடு சேர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதயூ பொங்கல் விழாவில் பங்கேற்று கொண்டாடினார்.

a great time celebrating Tamil Heritage Month and Thai Pongal says Justin Trudeau

அதிலும் குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரிய உடையான,வேட்டி சட்டை அணிந்து, தமிழக  மக்களின் உணர்வுகளுக்கும், விழாவிற்கும் முக்கியத்துவம் கொடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதயூ அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர் தமிழக மக்கள்.

பொங்கல் கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோவை, அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios