a girl reporter facing issues due to her dressing sense in show in saudi

சவூதி அரேபியாவில்,சமீபத்தில் தான் முகமது பின் சாலமன் இளவரசராக பதவி ஏற்றார்.இவர் இளவரசராக பதவியேற்றது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு தான்..காரணம் அங்குள்ள பெண்கள் இதுவரை கடைபிடித்து வந்த பல கட்டுப்பாடுகளில் சில மாற்றம் கொண்டு வந்து பெண்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

இளவரசரின் இந்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் மேலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பெண்களுக்கு ஓட்டு போடும் உரிமை வழங்கியது.கார் ஓட்டுனர் உரிமம் சமீபத்தில் வழங்கியது ...

இன்னும் சில மாற்றங்கள் பெண்களுக்காக கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கியது. தொடர்பாக சமீபத்தில் தொலைக்காட்சியில் நேரலையாக நிகழ்ச்சியை தொகுத்து கொடுத்து வந்துள்ளார் ஒரு பெண் செய்தியாளர்

அப்போது காற்று வேகமாக வீடி உள்ளது..வேகமாக வீசிய காற்றில் இயற்கையாகவே தன்னுடைய ஆடை சற்று விலகி உள்ளது. உடனே அந்த பெண் அதனை சரி செய்து விட்டு, தன்னுடைய வேலையை அப்படியே தொடர்ந்து மிக சிறப்பாக செய்தியை மக்களுக்கு கொடுத்தார்.

இதனை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத விதமாக இந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

ஷரீன் அல் ரிபாய் என்ற பெயர் கொண்ட இந்த பெண், அநாகரிகமாக உடை அணிந்ததாகவும் அவர் மீது விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், காற்று வீசியதால் ஆடை சற்று விலகியது இயற்கையான ஒன்று என்று விளக்கம் கொடுத்து உள்ளார்

தொலைககாட்சியில் பார்த்த அனைவருக்குமே தெரிந்த ஒன்று அங்குள்ள குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லை போல என உலக அளவில் மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.