அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர்  டியானா என்பவர். இவர் சில ஆண்டு காலமாக ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.இவரின் சுயரூபம் மெல்ல மெல்ல தெரிய வந்துள்ளது. காதலன் மீது அதிக நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்த டியானா, தனக்கு துரோகம் செய்ததற்காக வித்தியாசமான முறையில் பழிவாங்க நினைத்தார். அதன்படி தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்த டியானா தன் வீட்டிற்கு சக நண்பர்களையும் காதலனையும் வரவழைத்தார்.

எனவே நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி ஆடல் பாடல் என பிறந்தநாள் நிகழ்ச்சியை சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென டியானா தனது காதலன் பற்றிய துரோக செயல்களை அனைவரின்முன் போட்டுடைத்தார்.

அப்போது இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத காதலன் முகம் வாடி என்ன செய்வது என்று தெரியாமல்அனைவரின் முன்  தலைகுனிந்து நின்றார் அதுமட்டுமல்லாமல் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலேயே அவரை வீட்டில் இருந்து வெளியே போகும்படி கூறினார்.

மேலும் அவமானம் அடைந்த காதலன் உடனடியாக அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இவரின் இந்த செயல்கள் அனைத்தையும்  படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, துரோகம் செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் இது போன்று மென்மையாக கண்டிக்க வேண்டும் என்றும், துரோகம் செய்பவர்களை தங்களுடன் என்றும் கூட வைத்திருக்கக்கூடாது  என்பதை புரிய வைக்கும் சில கருத்துக்களை பதிவிட்டு மற்றவர்களுக்கும் இது ஒரு உதாரணமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பொதுவாகவே காதலர்கள் என்றால் ஏமாற்றம் அடையும் போது காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தான் காதலித்த காதலியை பழிவாங்க நினைப்பதும், அதற்காக மார்பிங் போட்டோ வெளியிடுவது, மிரட்டுவது, ஆசிட் வீசுவது என செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால், டியானா சாமர்த்தியமாக செயல்பட்டு, துரோகம் செய்த காதலனின் உண்மையான  சுயரூபம் அனைவரும் தெரிந்துக் கொள்ளும்படி  செய்து விட்டார்.