புறா தலையுடன் சிக்கிய மீன் !! சீனாவில் அதிசயம்!!
சீனாவில் புறா போன்ற தலையுடன் சிக்கியுள்ள மீன் ஒன்றை நூற்றுக்கணக்கானோர் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.
சீனாவின் குயிஷோயி மாகாணத்தின் குயாங் பகுதியில் உள்ள மீனவர்ஒருவரின் வலையில் புறா போன்ற தலையைக் கொண்ட மீன் கடந்த வாரம் சிக்கியுள்ளது.இதைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு அலைமோதியுள்ளனர்.
தண்ணீரிலே வைக்காமலே வெளியில் வைத்து பார்க்கப்பட்டதால், இந்த மீன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளது. ஆனாலும் இந்த வகை விசித்திர மீனைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கிராஸ் கார்ப் என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இது காணப்படும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த மீன் பறவை இனத்தைச் சேர்ந்ததா? அல்லது மீன் இனத்தைச் சேர்ந்தா என விலங்கின ஆர்வலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.