மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 44 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.. ஒட்டு மொத்த தேசமும் சோகத்தில் மூழ்கியது.

இந்த தீவிபத்தால் மருத்துவமனை முழுவதும் புகைமூட்டம் பரவியதால்  நோயாளிகளில் பலருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மோசமாக இருமலால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

A fire at a hospital has 44 peopledied. The entire nation is in mourning.

நசீரியா நகரில் உள்ள கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தனர், 67 பேர் காயமடைந்தனர், ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த கோர விபத்து நடந்துள்ளது.ஈராக்கின் தெற்கு நகரமான நசிரியாவில் உள்ள அல் ஹுசைன் கோவிட் மருத்துவமனையில் திங்கள் கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 சுகாதார ஊழியர்கள் உட்பட 44 பேர் இறந்தனர் மற்றும் 67 பேர் காயமடைந்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிட் வார்டில் ஆக்ஸிஜன் டேங்கர் வெடித்ததால்  தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

A fire at a hospital has 44 peopledied. The entire nation is in mourning.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் முஸ்தபா அல் காதிமி மூத்த அமைச்சர்களுடனாக ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், நசீரியா மருத்துவமனையின் பாதுகாப்பு மேலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்
என அஞ்சப்படுகிறது.  இந்த தீவிபத்தால் மருத்துவமனை முழுவதும் புகைமூட்டம் பரவியதால்  நோயாளிகளில் பலருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மோசமாக இருமலால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தீக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இன்னும் பலர் காணவில்லை எனக் கூறப்படுவதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

A fire at a hospital has 44 peopledied. The entire nation is in mourning.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு, பாக்தாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டதில் 82 பேர் உயிர் இழந்தனர், 110 பேர் காயமடைந்தனர். ஏற்கனவே போர் மற்றும் பொருளாதாரத் தடைகளால் நிலைகுலைந்துள்ள ஈராக்கின் சுகாதாரத் துறை, கொரோனா வைரஸைக் கையாள்வதில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த தீ விபத்து மேலும் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைந வைத்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் அங்கு 14.38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 17,592 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios