Asianet News TamilAsianet News Tamil

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி.. கனடாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கனடாவின் பிராம்டனில் நடந்த அணிவகுப்பின் ஒரு பகுதியாக சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.

A decorative car depicting the assassination of Indira Gandhi.. A shocking incident in Canada
Author
First Published Jun 7, 2023, 4:11 PM IST

மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி கனடாவில் இடம்பெற்றிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4-ம் தேதி, கனடாவின் பிராம்ப்டன் நகரில் 5 கிமீ நீள அணிவகுப்பின் ஒரு பகுதியாக இந்த அலங்கார ஊர்தி இருந்ததை ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவை பால்ராஜ் தியோல் என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார்.

 

அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இருந்து சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்ற இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் புளூஸ்டாருக்கு சில மாதங்களுக்குப் பிறகு, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார். பொற்கோயில் சீக்கியர்களின் புனித தலமாகும்.

ஹிட்லருக்கு காதலி கொடுத்த பென்சில்! சொற்ப தொகைக்கு விலைபோனதால் ஏமாற்றம்!

"சமீப காலமாக கனடாவில் உள்ள இந்திய தூதரகப் பணிகளுக்கு எதிராக காலிஸ்தானி ஆதரவு தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள் குறித்த தனது வலுவான கவலைகளை" தெரிவிக்க, மார்ச் மாதம், இந்தியா கனடா நாட்டின் உயர் ஆணையரை வரவழைத்தது..

கடந்த ஆண்டு, "காலிஸ்தான்" மீதான வாக்கெடுப்பு, அதாவது தனி சீக்கிய தேசத்திற்கான கோரிக்கை தொடர்பாக கனடாவை இந்தியா கடுமையாக சாடியது. இந்த வாக்கெடுப்பு "ஆழமான ஆட்சேபனைக்குரியது" மற்றும் "அரசியல் உந்துதல்" தீவிரவாத சக்திகளின் செயல்பாடு என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

2030க்குள் உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு மின்சாரம் கிடைக்காதாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios