விர் விரென அழுத குழந்தை! அமைதியான பாராளுமன்றம்! அங்கேயே பாலூட்டிய எம்.பி., கில்டா!
பசிக்காக அழுத குழந்தைக்கு, நாடாளுமன்றம் என்றும் பாராமல் அங்கேயே பாலூட்டி, குழந்தையை ஆசுவாசப்படுத்திய எம்பி கில்டாவை சக உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றார். அவர் விதித்த உத்தரவின் பேரில், பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் , கைக்குழந்தைக்கு தாயான எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ தன் மகன் ஃபெடரிகோவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், கைக்குழந்தை திடீரென விர் விர்ரென அழத்துவங்கியது. அழுகையின் இடையே பாராளுமன்றம் அமைதியானது. இருப்பினும், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.
குழந்தை பசிக்காக அழுவதை தெரிந்துகொண்ட தாயும், எம்.பி.,யுமான கில்டா ஸ்போர்டெல்லோ அங்கேயே தனது குழந்தையை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை கண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
அனைத்து கட்சிகளும் உறுப்பினர்களும் ஆதரவளித்து குழந்தை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் அவையில் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு 'டச்சு நோபல் பரிசு'! அறிவியல் உலகின் உயரிய விருது!
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றுக்கொண்டார். பெண் எம்.பி.க்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதியை அவர் கடந்த நவம்பர் மாதம் வழங்கினார். பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்.பி.,க்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.