9 மணிக்குமேல் ஒட்டலுக்கு தனியாக வரும் பெண்களுக்கு உணவில்லை... எங்கு தெரியுமா?
கல்லூரி, அலுவலகம் செல்லும் திருமணமாகத பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதே பெற்றோர்களின் பெரும்
கவலையாக உள்ளது. இதற்காக பெற்றோர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
கல்லூரி, அலுவலகம் செல்லும் திருமணமாகத பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதே பெற்றோர்களின் பெரும்
கவலையாக உள்ளது. இதற்காக பெற்றோர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
இந்த நிலையில், திருமணமாகாத அல்லது உறவினர்களாக இல்லாத ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரக் கூடாது என்று
இந்தோனேஷியாவில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக உணவகங்களுக்கு வரும் பெண்களுக்கு உணவு வழங்க வேண்டாம் என்றும் இந்தோனோஷிவின்
ஆட்ஜே மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறினால் தண்டனை கிடையாது என்றாலும், இதனை முறைப்படி சட்டமாக்கப்பட வேண்டும் என்று மாவட்ட
நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறதாம். இந்த கட்டுப்பாடுகள் விரைவில் சட்டமாக்கப்படுவது குறித்து அதிகாரிகள்
திட்டமிட்டு வருகிறார்களாம்.
இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாநிலம் அட்ஜே என்பது குறிப்பிடத்தக்கது.