அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து 8 உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் சான் ஆண்டோனியா மாகானத்தில் வால்மார்ட் வாகன நிறுத்தம் உள்ளது. அங்கு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

அப்போது, கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

சரக்கு ஏற்றும் கண்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வால்மார்ட் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் கன்டெய்னரில் இருந்த 38 பேரை மீட்டனர். அதில், 8 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன. மேலும் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்டெய்னரில் அடைத்து மனிதர்களை கடத்தி வந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.