இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 295ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை அறிவித்திருக்கிறது. மேலும், தாக்குதலுக்கு 6 பேர் சந்தேக நபர்கள்  பெயர்களை வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறு அன்று, இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. நேற்று மாலை வரை சுமார் ஒன்பது இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இதில் பலியானோர்களின் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிகிச்சையில் இருக்கும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்குத் தொடர்புடைய 26 பேர் புலனாய்வுத் துறையாலும், மூன்று பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், ஒன்பது பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே  புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கை குறித்து முழுமையான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

அதில், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு தலைவர் மொஹமட் சஹானினால் தற்கொலை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டப்பட்டதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால், இலங்கை புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், இந்த தாக்குதலுக்கு 6 பேர் சந்தேக நபர்கள் தொடர்பிலும் அவர்களின் மேற்கொள்ள ஆயத்ததாக இருந்த தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கையில், சஹாரன் ஹாஷீம், ஜால் அல் குய்தால், ரில்வன், சஜிட் மவ்லவி, ஷாஹிட், மில்ஹான் இவர்களின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மீடியாவில் பிரேக்கிங் நியூஸாக ஓடிக்கொண்டிருக்கிறது.