Ukraine-Russia War: உக்கிரமடையும் போர்... உக்ரைனில் இருந்து 8.36 லட்சம் பேர் வெளிநாடுகளில் தஞ்சம்!!
ரஷ்யாவின் கொடூர தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கொடூர தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. போர் ஓரிரு நாளில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது உக்ரைன் மீது 8 ஆவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைன் - ரஷ்யா மோதல் தீவிரம் அடைந்து வருவதால் உயிரை காப்பாற்றிக்கொள்ள உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் பெற்று வருகின்றனர். தலைநகர் கீவ் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 ஆஆம் நாளாக போர் நீடிக்கும் நிலையில், 8 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து இருப்பதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. நேற்று வரை 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை சுமார் 8 லட்சமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பலர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.