24 மணி நேரத்தில் 756 பேர் பலி..! இத்தாலியில் உச்சக்கட்டம் அடையும் கொடூர கொரோனா..!

இத்தாலியில் இதுவரையில் 97,689 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 756 ஆக இருக்கிறது. 

756 people died in past 24 hours in italy

உலகளவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடான அங்கு இதுவரையில் 97,689 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 756 ஆக இருக்கிறது. இதையடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,779ஆக உயர்ந்துள்ளது.

756 people died in past 24 hours in italy

உலகம் முழுவதும் தற்போது வரை 722,196 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 33,976 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் எகிறி வரும் கொரோனா வைரஸ் நோயை சமாளிக்க முடியாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

756 people died in past 24 hours in italy

சீன நாட்டில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் உலகத்தின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. இத்தாலி,ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா என உலகத்தின் 199 நாடுகளில் பரவி மக்களின் உயிர்களை அசுரவேகத்தில் பறித்து வருகிறது. உலகளவில் தற்போது அதிகபட்சமாக அமெரிக்காவில் 142,178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios