பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

பப்புவா நியூ கினியாவில் கடலோர நகரமான வெவாக்கில் இருந்து 97 கிலோமீட்டர் தொலைவில் 62 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

7 Magnitude Earthquake Hits Papua New Guinea, No Tsunami Warning Issued

திங்கள்கிழமை விடியற்காலையில் பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. கடலோர நகரமான வெவாக்கில் இருந்து 97 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் 62 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:00 மணிக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் சுனாமி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் காதலில் விழுவதற்கு ஒரு வாரம் விடுமுறை! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்!

நிலநடுக்க ஏற்பட்ட பகுதியில் உறுதியற்ற நிலப்பகுதிகள் தளர்வடைவது அப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது,. ஆனால், அப்பகுதியில் மக்கள்தொகை குறைவாக உள்ளதாக பெரிய பாதிப்பு இருக்காது என்று யு.எஸ்.ஜி.எஸ். (USGS) தரப்பில் சொல்லப்படுகிறது.

இத்தகைய தளர்வு, தரையில் கணிசமான சரிவு மற்றும் கிடைமட்ட சறுக்கலை ஏற்படுத்தி பெரும் சேதத்தை விளைவிக்கும், என்று யு.எஸ்.ஜி.எஸ். கூறியுள்ளது. பப்புவா நியூ கினியா தீவில் இந்தோனேசியாவின் எல்லையில் இருந்து கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நியூ பிரிட்டன் பிராந்தியத்தைச் சேர்ந்த கிழக்கு பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு தீவுக்கூட்டத்தில் பிப்ரவரி மாத இறுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் தாக்கியது நினைவூட்டத்தக்கது.

மீன் உணவு பிரியர்களுக்கு எச்சரிக்கை! இந்த மீனைச் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசிங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios