பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பயங்கர அதிர்வால் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன
 

7.1 Magnitude Earthquake Hits Northern Philippines

பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க:சொந்த வீட்டை விற்கும் மார்க் ஜூர்க்கர்பெர்க்.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா? வாயை பிளந்த நெட்டிசன்கள் !

இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தின் அதிர்வால் கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. நிலநடுக்க அதிர்வால் பீதியடைந்த மக்கள், தங்களது வீடுகளை வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். 7.1 ரிகட்ர் அளவில் பதிவாகி இருப்பதால், பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்சில் 1990-ம் ஆண்டு 7.7 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7.1 Magnitude Earthquake Hits Northern Philippines

மேலும் படிக்க:விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் முழு பாம்பு தலை... அலறி துடித்த பயணிகள்.. விமான நிறுவனம் சொன்ன பதிலை பாருங்க.

வடக்கு பிலிப்பைன்ஸில் புதன்கிழமை காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  தலைநகர் மணிலா முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8:43 மணிக்கு லூசோன் பிரதான தீவில் உள்ள அப்ரா மலைப் பிரதேசத்தில் உள்ள டோலோரஸுக்கு கிழக்கு-தென்கிழக்கே 10 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மைய பகுதியாக உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios