Tsunami Warning | ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1ஆக பதிவு! -சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தில் உள்ள மியாசாகி கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ஜப்பானின் மியாசாகி அருகே பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் முதலில் நிலநடுக்கத்தை 6.9 ரிக்டர் அளவில் பதிவு செய்தது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தெற்கு தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (18.6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால், கியூஷுவின் தெற்கு கடற்கரை மற்றும் அருகிலுள்ள ஷிகோகு தீவில் 1 மீட்டர் (3.3 அடி) வரை அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் அல்ல! எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு 25 மணிநேரமகலாம்!
மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா மற்றும் எஹிம் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. குடியிருப்பாளர்கள் கடற்கரையிலிருந்து விலகி இருக்குமாறும், நிலைமையை கண்காணிக்க முயற்சிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், அவற்றை தாங்கும் வகையில் கடுமையான கட்டிட விதிமுறைகளைக் கொண்டுள்ளது. சுமார் 125 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜப்பானில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. இருப்பினும், சேதம் இடம் மற்றும் ஆழத்தின் அடிப்படையில் அவை மாறுபடுகிறது.
ஜப்பானின் மிகப் பெரிய நிலநடுக்கமானது, மார்ச் 11, 2011 அன்று 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இது கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது, இதன் விளைவாக சுமார் 18,500 பேர் இறந்தனர் அல்லது காணாமல் போனவர்கள். மேலும், இதனால், ஃபுகுஷிமா ஆலையில் அணுசக்தி பேரழிவை ஏற்படுத்தியது. 2011 பேரழிவின் மொத்தச் செலவு 16.9 டிரில்லியன் யென் ($112 பில்லியன்) என மதிப்பிடப்பட்டது.
நோட் பண்ணிக்கோங்க... மூன்றாம் உலகப் போர் இந்த தேதியில்தான் தொடங்கும்... இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் உறுதி!
மீட்பு மற்றும் அவசரகால முயற்சிகள் நடைபெற்று வருவதால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ள அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.