இந்திய நண்பனுக்கு சீனா அனுப்பிய தரமான கருவிகள்..!! விமானத்தில் வந்திறங்கிய 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்.!!
இந்நிலையில் இந்த கருவிகள் கடந்த வாரமே இந்தியாவின் கைக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் , அதில் தாமதம் ஏற்பட்டது , இந்தியாவிற்கு அனுப்ப வேண்டிய கருவிகளை சீனா , அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின , இந்நிலையில் ஒரு வார கால தாமதத்துக்குப் பின்னர் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனை கருவிகள் குவாங்சோ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று அதிகாலை அனுப்பப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இந்திய தூதர் மிஸ்ரி தெரிவித்துள்ளார் , கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டதையடுத்து சுமார் இரண்டு மாதத்துக்கு பின்னர் சீனாவில் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளன . இந்நிலையில் பல்வேறு நாடுகளுக்கு சீனா முகக் கவசங்கள் , வென்டிலேட்டர்கள், ஆன்டிபாடி சோதனை கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ளது .
இதற்கிடையில் நாட்டில் 12 , 380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , சுமார், 414 பேர் உயிரிழந்துள்ளனர் , இந்நிலையில் இந்தியாவுக்கு பரிசோதனை கருவிகளின் தேவைகள் அதிகரித்துள்ளதால் , சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மருத்துவ உபகரணங்களை சீனாவிடமிருந்து காலதாமதமின்றி பெறுவதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது, இந்நிலையில் தற்போது மருத்து உபகரண பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லாவோ லிஜியன், இந்தியாவின் அவசரத் தேவையை உணர்ந்து , இந்தியாவுக்கு தேவையான மருத்துவ கருவிகள் அனுப்பி வைக்கப்படுகிறது, சரியான நேரத்தில் பொருட்கள் அனுப்பி இருப்பது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு நாடுகளுக்கு உபகரணங்களை அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .
உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தரமான பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என லாவோ லிஜியன் தெரிவித்துள்ளார் . ஐரோப்பிய நாடுகள் வைத்த புகாரின் அடிப்படையில் தரமான பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை சீனா எடுத்துவிடுகிறது . அதாவது கள்ளச் சந்தைகளில் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார் . எனவே சுமார் 6.5 லட்சம் மருத்துவ பரிசோதனைக் கருவிகளுடன் சீனாவின் குவாங்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானம் , பிற்பகல் டெல்லி வந்தடைந்தது. விரைவில் பொருட்கள் அனைத்தும் மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களில் மேலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை கருவிகள் சீனா அனுப்பிவைக்கும் என சீனாவுக்கான இந்திய தூதர் கூறியுள்ளார் .