சிறுமிகளின் ஆபாசத்தை ரசிக்கும் 500 சேக்கோ கொடூரன்கள்...!! பிரத்யேக வாட்ஸ்ஆப் குழு வைத்திருந்த பயங்கரம்..!!

அதில்  பல சிறுமிகளை ஏமாற்றி, அவர்களுடன் பாலியல்  அத்துமீறல்களில் ஈடுபட்டதுடன் அதை வீடியோவாக எடுத்து சுமார் 500 பேர் கொண்ட  30 வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து அதில் பணம் சம்பாதித்ததாக  அவர் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களின் உள்ளவர்களிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. 

500 child abusers have individual whatsapp groups for child porn videos indian cbi enquiry started

ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியை சேர்ந்தவர்  சாஷே டிரெப்கே  மென்பொறியாளரான இவர் கடந்த  2016ம் ஆண்டில் பாலியல் புகார்  ஒன்றில்  கைது செய்யப்பட்டார்.   பிறகு அவரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியானது.

 500 child abusers have individual whatsapp groups for child porn videos indian cbi enquiry started

அதில்  பல சிறுமிகளை ஏமாற்றி, அவர்களுடன் பாலியல்  அத்துமீறல்களில் ஈடுபட்டதுடன் அதை வீடியோவாக எடுத்து சுமார் 500 பேர் கொண்ட  30 வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து அதில் பணம் சம்பாதித்ததாக  அவர் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களின் உள்ளவர்களிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த குழுக்களில் இருந்த 500 பேரில்  ஏழு பேர் இந்தியர்கள் என்றும், பிறகு  தகவல் தெரிந்தது. அந்த ஏழு பேர் குறித்த விவரங்களை ஜெர்மனி போலீசார் இந்திய தூதரகத்தின் வாயிலாக சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணையில் குதித்த சிபிஐ அதிகாரிகள்,   நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

500 child abusers have individual whatsapp groups for child porn videos indian cbi enquiry started

அதில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த வினோத் கண்ணா, மற்றும் தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த தோஷிமா என்பவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் அங்கு சிக்கியதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இன்னும் இந்த விசாரணை நீடிக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  கள்ளம் கபடம் இல்லாத அப்பழுக்கற்ற சிறுமிகளை தன் காம இசைக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல் அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில்  பகிர்ந்த  மனித மிருகங்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும்  சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios