பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 ரோடுகள் மற்றும் 5 பெரிய பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பெயர் சூட்டி மகிழ இருக்கிறார்கள்.

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பிரச்சனையை தனது நெருங்கிய நட்பு நாடான சீனா மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்று சர்வதேச பிரச்சனையாக மாற்ற முயன்றது. ஆனால் அங்கும் பாகிஸ்தான் முயற்சி தோல்வி அடைந்தது. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் 13 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 ரோடுகள் மற்றும் 5 பெரிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் புஷ்தார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனைக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சுதந்திர தினம் அங்கு கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. கடந்த 14-ந்தேதி தனது நாட்டின் சுதந்திர தினத்தை காஷ்மீர் உணவு தினமாக கொண்டாடியது.