இதயத்தை உருக்கும் காணொளி! எப்போதுமே தனிமை.. பாசத்துக்காக ஏங்கும் 4 வயது கொரிய சிறுவன்..!
இன்றைய காலகட்டத்தில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு மத்தியில் வாழும் குழந்தையின் மனநிலை எந்த மாதிரி இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.
நம்மில் சிலருக்கு நம் பெற்றோருடன் நெருங்கிய பந்தம் இருந்தாலும், அத்தகைய உறவுகள் மற்றவர்களுக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கலாம். இந்த பிரச்சினைகளை மிக இளம் வயதிலேயே கையாள்வது, குழந்தைகளை பாதிக்கலாம். சமீபத்தில் நான்கு வயது சிறுவன் தன் பெற்றோரைப் பற்றி பேசும்போது உடைந்து போன சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது இப்போது அது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
கொரிய ரியாலிட்டி ஷோவான "மை கோல்டன் கிட்ஸ்" இன் இதயம் உருகும் அளவிற்கு கிளிப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கியூம் ஜி-யூன் என்ற 4 வயது சிறுவனிடம் ஒரு தொகுப்பாளர் "உன் பெற்றோரில் நீ யாரை அதிகம் விரும்புகிறாய்?" என்று கேட்டனர். அவனது பதில் அனைவரது மனதையும் கனக்கச் செய்தது. அதாவது, "எனக்குத் தெரியாது," என்று அச்சிறுவன் கூறினான். மேலும் "நான் எப்போதுமே வீட்டில் தனியாக தான் இருப்பேன், யாரும் என்னுடன் விளையாடுவதில்லை" என்று சோகமாகக் கூறினான்.
அந்த சிறுவனுடம் அப்பா பற்றி கேட்டபோது, "என் அப்பா கோபமாக இருக்கும்போது எனக்கு பயமாக இருக்கும்" என்று நடுங்கிய குரலில் அச்சிறுவன் கூறினான். தன் தந்தை தன்னிடம் அன்பாகவும், மென்மையாகவும் பேசும் என்று ஏக்கத்தோடு தன் பதிலை கூறினான்.
அம்மாவை பற்றி கேட்டபோது, "என் அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று அவன் சொல்லும்போது அவனது கண்ணில் கண்ணீர் வடிந்தது. "என் அம்மா என் உடன் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தாயின் பாசத்திற்காக ஏங்கியபடியே பதில் சொன்னான்.
இதயத்தை உருக்கும் ஒன்றரை நிமிட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பல ஊடக பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. பெரும்பாலும் சிறுவனின் அவலநிலை குறித்து பயனர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். இவ்வளவு சின்ன வயதில் தனது உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டு பலர் அக்குழந்தையைப் பாராட்டினர். மேலும், அவரது அவலநிலை குறித்து கூறியவர்களும், அந்த வீடியோ தங்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியதாக பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து பயனர் ஒருவர் கூறுகையில் இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு நேரமில்லாத கண்டிப்பான மற்ற பணி புரியும் பெற்றோருக்கு வருவதாக கூறினார். இது குழந்தைகளுக்கு மோசமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.