மலேசிய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நான்கு தமிழர்கள் உள்பட ஐந்து இந்தியர்களுக்கு  அங்குள்ள அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹாதீர் முகமது  தமிழகர்ளுக்கு தகுந்த மரியாதை அளித்துள்ளார்.

மலேசியாவில்  மஹாதீர் முகமது தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 தமிழர்கள் உட்பட 5 இந்தியர்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர் என்பது இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தரக்கூடியதாக அமைந்துள்ளது.

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்கு அண்மையில்  தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த  நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

இதில் மஹாதீர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. கிட்டத்தட்ட  60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றினர்.

இந்நிலையில் மஹாதீர் முகமது  ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு  சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறார்.  தற்போது அமைச்சரவை விரிவாக்கத்திற்கு கூடுதலாக 15 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

அதில்,  சீக்கியரான கோபிந்த் சிங் டியோ, தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் தமிழகர்ளான   குலசேகரன், மனித வளத்துறை அமைச்சராகவும் சிவராசா ராசைய்யா  நீர் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகவும், வாய்தா மூர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சராகவும்,  ராஜரத்தினம் என்பவர் பிரதமர் அலுவலகத் துறையில் இந்திய விவகாரங்களை கவனிக்கும் அமைச்சராகவும் றிமிக்கப்பட்டுள்ளனர்.

மலேஷிய வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு 28 பேர் கொண்ட அமைச்சரவையில், நான்கு தமிழர்கள் உள்பட ஐந்து இந்தியர்கள் இடம்பெற்றுள்ளது  பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.