31 refuge killed in bomb blast at yemen

ஏமனில் அகதிகள் சென்ற படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 31 அகதிகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டுப் போர், வேலைவாப்ப்பின்மை, பஞ்சம் ஆகிய காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கனோர் ஐரோப்பிய தேசங்களுக்கு அகதிகளாக செல்கின்றனர்.. இதற்காக இவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான கடற்பயணம், இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரை காவு வாங்கியுள்ளது.

இந்த வரிசையில் சோமாளியாவில் இருந்து சூடானுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோட்டோர் படகு மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த படகு உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ள ஏமன் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது...

அப்போது வானில் சீறிப்பாய்ந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்று படகின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தது.

இதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.80க்கும் அதிகமோனோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.