UAS-ENG என 28 நாடுகள் ஆயுதம் வழங்க முடிவு.. நெதர்லாந்து 200 விமான எதிர்ப்பு ஏவுகணைகள், கெத்து காட்டும் UKRAINE
இதே நேரத்தில் உக்ரைனுக்கு உதவ நெதர்லாந்து 200 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போலந்து, லித்துவேனியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இன்று விவாதித்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 28 நாடுகள் ஆயுதம் தருவதாக உக்ரைனுக்கு உறுதி அளித்துள்ளன. நெதர்லாந்து 200 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டியது பணம் அல்ல ஆயுதமே என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா படைகள் இடைவிடாது தாக்கி வருகின்றன. மூன்றாவது நாளாக தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. 10 லட்சம் ராணுவ வீரர்களை கொண்ட ரஷ்யா வெறும் இரண்டு லட்சம் வீரர்களை கொண்ட உக்ரைன் மீது கட்டவிழ்த்துள்ள போரை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து தன்னந்தனியாக போராடி வருகிறோம், எந்த நாடும் எங்களுக்கு உதவ வில்லை, உக்ரைன் தனித்து விடப்பட்டது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரனுடன் தொலைபேசியில் உரையாடிய அவர், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது என்றும், பிற நாடுகளுடனான உக்ரைனில் ராஜாங்க உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்றும், ரஷ்யாவின் போருக்கு எதிராக கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.
ஆனால் மறுபுறம் உக்ரைன் மீதான தாக்குதலில் 800 உக்ரைன் ராணுவ தளங்களை அழித்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. 14 ராணுவ விமான நிலையங்கள், 19 கட்டளை நிலையங்கள், 24 S-300 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் 48 ரேடார் நிலையங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்துள்ளதாகவும், இதுதவிர உக்ரைன் கடற்படையின் எட்டு படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புகள் தலைநகர் கிவ்வுக்குள் நுழைந்துள்ளனர். இதற்குப் பிறகு கீவ் நகரில் பல்வேறு இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. முன்னதாகவே உக்ரைன் தலைநகர் கீவ் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது, அந்த குண்டு வெடிப்பில் பல குடியிருப்பு கட்டிடங்களும் பெரும் சேதமடைந்துள்ளன. இதேபோல் மெலிடோபோல் நகரையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதே நேரத்தில் உக்ரைன் 3,500 ரஷ்ய வீரர்கள், 2 டாங்கிகள், 14 விமானங்கள் மற்றும் 8 ஹெலிகாப்டர்களை அழித்ததாக கூறியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டன், அமெரிக்கா உட்பட மொத்தம் 28 நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும், ரஷ்யாவை எதிர்கொள்ள இந்த நாடுகள் ஆயுதம் தர ஒப்புக் கொண்டதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மூன்றாவது நாளான இன்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் இதற்கு முந்தைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. கீவ் நகரம் மீதான தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன, அதனால் அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிர்த்து 1 வாக்கும் கிடைத்துள்ளது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனினும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தணிக்கை பிரேரணையை ரஷ்யா நிராகரித்தது.
இதே நேரத்தில் உக்ரைனுக்கு உதவ நெதர்லாந்து 200 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போலந்து, லித்துவேனியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இன்று விவாதித்து வருகின்றனர். பிரெஞ்சு, கயானா விண்வெளி நிலையத்திலிருந்து அனைத்து விண்வெளி ஏவு கணைகளையும் ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது, இத்துடன் அங்கு பணிபுரிபவர்களை திரும்ப அழைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில் உக்ரைனில் பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் இராணுவம் ஆயுதத்தைக் கீழே போட்டால் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறுகிறது இந்த விமானத்தில் 150 ரஷ்ய பாராசூட்டர்கள் இருந்தனர், அதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் உயிர் பிழைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதேநேரத்தில் ரஷ்ய படை உக்ரைன் கிவ் விமான நிலையத்தை கைப்பற்றியது விமான நிலையத்தின் மீது ரஷிய இன்று இரவு தாக்குதல் நடத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் குதிக்கும்படி மக்களுக்கும் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.