பள்ளியில் பயங்கர தீ விபத்து... 28 மாணவர்கள் உடல் கருகி உயிரிழப்பு..!

பள்ளியின் விடுதியில் மாணவர்கள் தூக்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 28 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மேலும் பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28 children have died after a fire broke out in a boarding school in a suburb outside the Liberian capital

லைபீரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

28 children have died after a fire broke out in a boarding school in a suburb outside the Liberian capital

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில், மசூதியுடன் இணைந்த கட்டடம் ஒன்றில் இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

28 children have died after a fire broke out in a boarding school in a suburb outside the Liberian capital

இந்நிலையில், நேற்று பள்ளியின் விடுதியில் மாணவர்கள் தூக்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 28 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மேலும் பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

28 children have died after a fire broke out in a boarding school in a suburb outside the Liberian capital

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios