14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி! ஆதரவற்றோர் இல்லத்தில் விபரீதம்!
கன்னியாஸ்திரி ஒருவரால் 12 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 14 வயதில் சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லிதம் செயிண்ட் ஆனிஸ் பகுதியில் இருந்த ஜான் ரேனால்ட்ஸ் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 12 வயதில் தம்மை ஒரு கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹேய்ஸ் என்பவர் கூறியுள்ளார். எனக்கு 10 வயது ஆனபோது, என்னை பெற்றோர் கைவிட்டுவிட்டனர். இதனால், நான் ஜான் ரேனால்ட்ஸ் இல்லத்தில் சேர்க்கப்பட்டேன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்த நான், பாடல்களை பாடுவதிலும் சிறந்து விளங்கியதால், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த எல்லோருக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது. கால்பந்து விளையாட்டையும் நான் நன்றாக விளையாடுவேன் என்பதால், உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என பலர் என்னிடம் கூறினார். ஆனால், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 27 வயது கன்னியாஸ்திரி மட்டும் என்னை வேறு மாதிரியாக பார்த்தார். நான் இருந்த ஜான் ரேனால்ட்ஸ் இல்லம், கத்தோலிக்க தேவாலயத்துக்கு சொந்தமானது. இதனால், அங்கிருந்து நிறைய பேர் எங்கள் இல்லத்துக்கு வருவார்கள், நாங்களும் தேவாலயத்துக்குச் சென்று கடவுளிடம் எங்களது சிறுவயது ஆசைகளை நிறைவேற்றுமாறு, வேண்டிக் கொள்வோம். இப்படியாக நாட்கள் சென்றநிலையில், 1953ஆம் ஆண்டு மேரி கான்லெத் என்ற கன்னியாஸ்திரி என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருநாள் துணிகள் அடுக்கும் அறைக்குச் சென்றபோது, அங்கு கன்னியாஸ்திரி மேரி கான்லெத், அங்கிருந்த துணிகளை அலமாரிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். கீழே ஏராளமான துணிகள் கிடந்ததால், அவற்றை எடுத்து அடுக்க உதவுமாறு என்னிடம் கூறினார்.
நானும் அவருக்கு உதவி செய்தபோது, திடீரென கீழே குனிந்த அவர், எனது கால்சட்டையை கழற்றினார். அவர் என்ன செய்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. திடீரென அங்கு குவிந்திருந்த துணிகள் மீது என்னை தள்ளிய அவர், என் மீது பாய்ந்து, எனது உதடுகளில் முத்தமிட முயற்சித்தார். ஆனால், ஆணும் பெண்ணும் முத்தமிட்டால் குழந்தை பிறந்துவிடும் என நான் கருதிக் கொண்டிருந்ததால், அவரை முத்தமிட அனுமதிக்கவில்லை. வலுக்காட்டாயமாக அவரை விட்டு விலக முயற்சித்தும், அவரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அவர், நான் சொல்வதை நீ செய்யாவிட்டால், நீ மோசமான பையன் என்றும், உன்னை அதற்காக தண்டிப்பேன் என்றும் எனது காதில் கிசுகிசுத்தார். இறுதியில், அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அவர் என்னை முதல் முறையாக பலாத்காரம் செய்த போது எனக்கு வயது 12 மட்டுமே.
இதேபோல், கன்னியாஸ்திரி மேரி கான்லெத், 2 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து அவர் ஆசைக்கு இணங்க வைத்தார். எனக்கு 14 வயது ஆன போது, ஒரு நாள் தனிமையில் இருந்த போது உன்னால் நான் கர்ப்பமாகிவிட்டதாக அந்த கன்னியாஸ்திரி கூறினார். அவர் கர்ப்பமான தகவல் தேவாலய நிர்வாகத்துக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவரை கன்னியாஸ்திரி பணியில் இருந்து விடுவித்து, அவரது சொந்த நாடான அயர்லாந்துக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.
நாட்கள் உருண்டோடியது, எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையிலும், கன்னியாஸ்திரி என்னை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், மிகவும் சங்கடத்தை கொடுத்துக் கொண்டே இருந்ததால், மனைவியுடன் சராசரி உறவை மேற்கொள்ள முடியாமல் தவித்ததால், விவகாரத்து ஆகிவிட்டதாக ஹேய்ஸ் கூறியுள்ளார். கன்னியாஸ்திரியில் வயிற்றில் வளர்ந்த எனது குழந்தை என்ன ஆனது என்ற விவரம் எதுவும் தெரியாத நிலையில், 76 வயதில் எனது குழந்தையை அண்மையில் சந்தித்துள்ளதாக ஹேய்ஸ் கூறியுள்ளார். அயர்லாந்துக்கு சென்ற கன்னியாஸ்திரி, அங்கு வேறு ஒருவரை திருமணம் செய்ததால் பிறந்த குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, என்னை தேடிப்பிடித்து, 62 வயதான எனது மகளை என்னிடம் ஒப்படைத்துள்ளதாக நெகிழ்ந்துள்ளார் ஹேய்ஸ்.