உலக அளவில் மக்கள் கொரோனாவால் உயிர் இழக்கிறார்களோ இல்லையோ பசி  பட்டினியால் உயிர் இழக்கக் கூடிய நிலை  இந்தியா முதல் கென்யா வரை பல உலக நாடுகளில் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது  என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .  இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்  ரொட்டி காகவும் வருத்த காய்கறிகளுக்காகவும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வரிசையில் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது,  இதுவரையில் 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்து    80  ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா ,  ஐரோப்பா ,  ஆப்பிரிக்கா ,  அமெரிக்க என  பல்வேறு உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகின்றன .  இதனால்  கோடிக்கணக்கான  மக்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக அளவில் ஆய்வு நடத்திய நியூயார்க் டைம்ஸ் ,  இந்தியா முதல் கென்யா வரை உலக அளவில் பசி பட்டினி மக்களை வாட்டி வதைக்கிறது என தெரிவித்துள்ளது .  இந்தியாவில் கொல்கத்தா போன்ற  மாநிலங்களில் இது கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, கென்ய தலைநகரான நைரோபியில் ஏராளமான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர் .  அவர்களுக்கு உணவு பொருட்கள் நிவாரணமாக வழங்கியபோது அதைப் பெற முண்டியடித்து வந்ததில் பலர்   காயமடைந்துள்ளனர் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.  இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ரொட்டி மற்றும் வறுத்த காய்கறிகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கொலம்பியா முழுவதும்  லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்களது வீட்டு ஜன்னல்கள் மற்றும் பால்கணிகளிலிருந்து சிவப்பு ஆடை மற்றும் கொடிகளை தொங்கவிட்டு தங்களுக்கு உணவு வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர். 

உலகில் திரும்பிய பக்கம் எல்லாம் இதுபோன்ற காட்சியாகளே தென்படுகின்றன ,  கொரோனா வைரஸ் மில்லியன் கணக்கான மக்களை பட்டினியில் தள்ளியுள்ளது.  உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் உணவுக்கான கவலை அதிகரித்துள்ளன.  தேசிய அளவிலான ஊரடங்கால்  வேலை இழந்து ,  வருமானம் இழந்து விவசாயிகள் உற்பத்தி இழந்து தவிக்கின்றனர்.  உலகளவில் சுமார் 135 பில்லியன் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்  என தெரிவித்துள்ள  ஐநா மன்றத்தின் உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணர். ஆரிஃப் ஹுசைன் தெரிவித்தார். மொத்தத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 265 மில்லியன் மக்கள் பட்டினியில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார் .  இதுவரையில் இது போன்ற பேரழிவை உலகம் சந்தித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார் .  இதற்கு முன்னர் மோசமான வானிலை மற்றும் பொருளாதார காரணிகள் ,  போர்கள் மூலமாகவே இதுபோன்ற நிலையை உலகம் சந்தித்திருக்கிறது என்றும்,  இந்நிலையில் உலகளவில் 368 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியில் பெற்று வந்த சாதாரண உணவு சிற்றுண்டிகளை இழந்துள்ளனர் என கூறியுள்ளார். 

சூடான் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகள் உணவுக்காக திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ,  எண்ணை வருவாயை அதிக அளவில் பயன்படுத்தி வந்த ஈரான் போன்ற நாடுகளும் இதற்கு ஆளாகி உள்ளன.  வெனிசுலாவில் ஏற்கனவே பொருளாதார சரிவில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் உகண்டா மட்டும் எத்தியோப்பியா,  தென்சூடான் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகளிலும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  மாலி நைஜர் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். நோய் காட்டுப்பாடுகள்  அதிகமான துன்பங்களை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச மீட்புக் குழுவில் ஆப்பிரிக்காவின் பிராந்திய துணைத்தலைவர்  கர்ட் ஜோஸ்ஸெம்  கூறியுள்ளார் .  வடக்கு சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் இடம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் .  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மோசமான விளைவுகளை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் பசியின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் மக்கள் சாலைகளில் போராட குதித்துள்ளனர் என கூறியுள்ளது.   நியுயார்க் ஆய்வு கட்டுரை.