அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி அவனிடம் உல்லாசமாக இருந்த  இந்திய ஆசிரியை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா (24). இந்தியரான இவர் ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுவனுக்கும் அந்த ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, அவனுக்கு தன் நிர்வாண படங்களையும், ஆபாச படங்களையும் செல்போனில் அனுப்பியுள்ளார். பள்ளியிலும், சிறுவனுக்கு முத்தம் கொடுத்து, ஆபாச செய்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதையும் படிங்க;-  மலைக்க வைக்கும் கணக்கில் வராத சொத்துக்கள்... வசமாக சிக்கிய வேலம்மாள் குழுமம்..!

இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோருக்கு தெரியவந்ததும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, ஆசிரியை ரூமாவை விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக துன்பறுத்தல் தந்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததற்காக, 11 லட்சம் ரூபாயும், தவறான நோக்கத்துடன் சிறுவனை கவர்ந்திழுத்ததற்காக, 7 லட்சம் ரூபாயும் செலுத்தி, ஜாமீன் பெற்றுக் கொள்ள ரூமாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியை, மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். அதன் விளைவாக விரைவில் நாடு கடத்தப்படும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.