கடந்த 2015ம் ஆண்டு முதல் தெற்காசிய நாடான ஏமனில் அந்நாட்டின் அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஹவுதி இன மக்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஈரான் ஆதரவுடன் நடைபெறும் இப்போரில் உள்நாட்டு படைகளுடன் அண்டை நாடான சவூதி அரேபியாவின் படைகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரையில் பலர் கொல்லப்பட்டு நாடே போர்கோலமாக காட்சி அளிக்கிறது.

இந்தநிலையில் ஏமன் நாட்டின் வடமேற்கில் மரிப் மாகாணத்தின் அல்-மிலா என்னும் இடத்தில் ராணுவ பயிற்சி முகாம் இருக்கிறது. இதைகுறிவைத்து தற்போது தாக்குதல் நடந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை ஒன்று ராணுவ குடியிருப்பு மீது தாக்கியிருக்கிறது. இதில் 24 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தாலும் ஏவுகணை தாக்குதல் குறித்து இதுவரையிலும் பொறுப்பேற்கவில்லை.

Also Read: இருமுடி கட்டி மலையேறிய ஓ.பி.எஸ்..! சபரிமலையில் பயபக்தியுடன் தரிசனம்..!