10 வயது சிறுவனால் 13 வயது சிறுமி கர்ப்பமானதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது ,  பின்னர் அச்சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில்  இனப்பெருக்கம்  செய்யுமளவிற்கு சிறுவன்  முதிர்ச்சி பெறவில்லை என தெரியவந்துள்ளது .   ரஷ்யாவின் சிலஸ்னோஸ்குரோக்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி  டரியா பொற்றோர்களுக்கு ஒரேமகளான இச்சிறுமி திடீரென கர்ப்பமானார் ,  இது அவரது பெற்றோர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

 உடனே அவரை விசாரித்ததில் 10 வயது சிறுவன் இவான் வுடன் உடலுறவு வைத்துக் கொண்டதால் தான் கர்ப்பம் அடைந்ததாக அந்த சிறுமி கூறியது பெற்றோர்களை அதிர்சியடைய வைத்தது  இந்நிலையில் சிறுவன் -சிறுமி  விவகாரம்  தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளியானது இந்நிலையில்  சிறுமிக்கும்  சிறுவனுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது அப்போது தெரிவித்த, பாலியல் சிறப்பு மருத்துவர் ஒருவர் ஒரு குழந்தைக்கு  தந்தையாகவும் அளவிற்கு சிறுவனுக்கு முதிர்ச்சி இல்லை ,  அவனுக்கு அந்த அளவிற்கு உடல் திறனும் இல்லை என கூறியுள்ளார்.ஆனால் அந்தச் சிறுமி தனக்கு வேறு யாருடனும் தொடர்பு இல்லை ,  சிறுவனுடன் மட்டுமே உறவு வைத்துக் கொண்டேன் என அந்த 13 வயது சிறுமி உறுதியாகக் கூறி வருகிறார். 

அந்த சிறுமிக்கு மன நலாலோசணையும் செய்யப்பட்டுள்ளது அதிலும் அந்த சிறுமி நலமுடன் உள்ளார் ஆனாலும் சிறுவனே தன் கர்பத்துக்கு காரணம் என்றும் அவர் கூறிவருகிறார்,  இந்நிலையில்  அந்த சிறுமியின் பெற்றோர்கள் தம் மகளுக்கு ஆதரவாக இருக்க போவதாகவும் , குழந்தை பிறந்தால் அதை தாங்களே வளர்க்கப் போவதாகவும் கூறியுள்ளனர்,   குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையின்  டிஎன்ஏவை பரிசோதித்து அந்த குழந்தைக்கு தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .