Uganda:இனிமே குழந்தை பெத்துக்கமாட்டாராம்!12 மனைவிகள்,102 குழந்தைகள்,568 பேரன்கள் போதுமாம்: உகான்டா விவசாயி
ஒரு திருமணம், ஒரு குழந்தையை சமாளிக்கவே பலரும் சிரமப்பட்டு, தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் சூழலில் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரன்களுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
ஒரு திருமணம், ஒரு குழந்தையை சமாளிக்கவே பலரும் சிரமப்பட்டு, தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் சூழலில் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரன்களுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
இதற்கு மேல் குழந்தைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உகான்டாவைச் சேர்ந்த மூசா ஹசாயா என்பவர் முடிவு செய்துள்ளதுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உகான்டா நாட்டின், லுகாசாவில் உள்ள புகிசா எனும் நகரில்தான் மூசா ஹசாயா வாழ்ந்து வருகிறார். 67 வயதாகும் மூசா ஹசாயாவுக்கு 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரன், பேத்திகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூட்டமாக வசித்து வருகிறார்கள்
மனித மூளையை தாக்கும் அமீபாவால் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழப்பு: பிரைன் ஈட்டிங் அமீபா?
கடந்த 1971ம் ஆண்டு மூசா ஹசாயா தனது பள்ளிப்படிப்பைத் துறந்து, 16வயதில் முதல் திருமணம் செய்தார். திருமணம் செய்து 2 ஆண்டுகளுக்குப்பின் முதன்முதலாக பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் 11 திருமணங்கள் செய்துள்ளார் மூசா.
உகாண்டா நாட்டில் ஒரு ஆண் பல திருமணங்கள் செய்வது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூசாவின் ஒவ்வொரு மனைவிக்கும் ஏறக்குறைய 8 முதல் 10 குழந்தைகள் வரை பிறந்துள்ளன. இதில் மூசாவின் கடைசி மனைவியின் வயது 21. இவரின் பெயர் ஜூலைகா.
மூசாவின் மூத்த மகனுக்கு 51 வயதாகிறது. இளைய மகனுக்கு 6 வயதாகிறது. அதாவது மூசாவின் கடைசி மனைவி ஜூலைகாவைவிட அவரின் மூத்த மகன் 31 ஆண்டுகள் வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானுக்கு மீண்டும் ‘டார்ச்சர்’ கொடுக்கும் சீனா: 43 போர் விமானங்களை அனுப்பி பயிற்சி
கடந்த சில ஆண்டுகளாக மூசாவுக்கு வருமானம் குறைவாக இருந்ததையடுத்து, இரு மனைவிகள் அவரைவிட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் வாழ்வாதாரச் செலவு அதிகரித்து வருகிறது,தன்னால் செலவைச் சமாளிக்க முடியவில்லை என்பதால், இதற்கு மேல் குழந்தைப் பெற்றுக்கொள்வதை மூசா நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூசா ஹசாயா கூறுகையில் “ வாழ்வாதாரச் செலவு அதிகரித்துவிட்டது, வருமானமும் குறைந்துவிட்டது. என்னால் குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்நிலவுகிறது. ஆதலால், என்னுடைய 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடச் சொல்லிவிட்டேன். இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
4 திருமணத்துக்கு மேல் செய்ய விரும்புவோர் போதுமான சொத்துக்கள் இல்லாமல் திருமணம் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறேன். எனக்கு 568 பேரக்குழந்தைகள் உள்ளனர், 102 குழந்தைகள் உள்ளனர். அனைவரின் பெயரையும் என்னால் நினைவில் வைக்க முடியவில்லை.
கையைப் பிசையும் சீனா! இந்த ஒரு நகரில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
எனக்கு நிறைய நிலங்கள் இருந்தன, வருமானம் நன்றாக வந்ததால், அதிகமான பெண்களை திருமணம் செய்தேன். குடும்பத்தை விரிவுபடுத்த எண்ணினேன். என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நிலங்களை வழங்கி அவர்களை விவசாயம் செய்யக் கூறியுள்ளேன். அதன் மூலம் அவர்களுக்கு கடைசிவரை உணவு கிடைக்கும். என்னுடைய குழந்தைகளை படிக்க வைக்க எனக்கு தற்போது சிரமமாக இருப்பதால், அரசிடம் உதவி கோரியுள்ளேன்” எனத் தெரிவித்தார்