காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய காதலன்... 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்!

அமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

10 year-old daughter pregnant jailed for 160 years

அமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது காதலன் த்ராஷ் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைனயடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து மருத்துவர்கள் பரிசோதித்தனர். பிறகு அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 10 year-old daughter pregnant jailed for 160 years

 உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவரது அம்மாவை அழைத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். த்ராஷ் 8 வயதிலிருந்தே பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவந்தது. இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். 

இதனையடுத்து த்ராஷ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குற்றவாளி நான் சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை. என்னுடைய விந்தணுவை அவருடைய அம்மா தான் கருப்பையில் திணித்தார் என குற்றம் சுமத்தினர்.

 10 year-old daughter pregnant jailed for 160 years

 இதற்கிடையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட டிஎன்ஏ பரிசோதனையில் த்ராஷ் குற்றாவளி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். விரைவில் சிறுமியின் தாய்க்கு தண்டனை வாங்கப்பட உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios