அமெரிக்க ரக்பி பேரணியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, குறைந்தது 21 பேர் காயம்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ரக்பி போட்டி வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடந்த பேரணியின்போது நடதப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறைந்தது 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது. அடிக்கடி பொது இடங்களிலும் குடியிருப்புகளிலும் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் மற்றொரு துயரமான சம்பவம் நடந்துள்ளது.
சீஃப்ஸ் சூப்பர் பவுல் என்ற ரக்பி விளையாட்டு போட்டியில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் பேரணி நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான ரக்பி ரசிகர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது பேரணியில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சூப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஸ்விக்கியில் போலி டாமினோஸ் பீட்சா விற்பனை... புகாருக்கு என்ன பதில் கிடைச்சுது தெரியுமா?
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூடு அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பங்களாவில் சடலமாகக் கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்... நடந்தது என்ன?