தன்னுடைய குழந்தையை தனது இல்லை என மனைவியை சந்தேகிக்கும் நாயகன் இவ்வாறு வேறொரு குழந்தைக்கு தந்தையாக சம்மதிப்பதா? என கடுப்பில் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கண்ணம்மா சீரியலில் தீவிரவாதி சீக்குவன்ஸ் முடிவடைந்ததை அடுத்து பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒரே வீட்டில் இருந்து கூட பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளும் முடிவில் இல்லை. இதற்கிடையே சௌந்தர்யாவின் பேச்சைக் கேட்டு மனமாரலாம் என்று பாரதி எண்ணி இருந்த வேலைகள் வெண்பா மீண்டும் பழையபடி பூகம்பத்தை கிளற ஆரம்பித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த வெண்பா பாரதியை தன் கழுத்தில் தாலி கட்ட வைத்து வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை ஆக்கியே தீருவேன் என்கிற தீர்மானத்திற்கு வந்திருக்கிறார். இது குறித்து பாரதியிடம் பலவாறு பேசியும் அவர் ஏற்காததால் உடனடியாக விஷமருந்தும் ட்ராமாவையும் போட்டு விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...டிடிஎஃப் வாசனை அடுத்து பைக் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி புகழ்...

பின்னர் வெண்பா மயமுற்று கிடப்பதை பார்த்த பாரதி அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சைக்கு பின்னர் வெண்பா கண் விழிக்கிறார். என் என்னை காப்பாற்றினாய் என கேட்கும் வெண்பா மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி கேட்கிறார். ஆனால் முதலில் பாரதி மறுத்ததோடு பலவாராக வெண்பாவை திட்டியும் தீர்க்கிறார். டக்கென பேச்சை மாற்றும் வெண்பா, தனது கழுத்தில் தாலி கட்டினால் மட்டும் போதும் என கூறுகிறார். அதைக் கேட்ட பாரதி சம்மதிப்பது போல ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...என்ன இப்படி இறங்கிட்டாங்க..வயிற்றில் குழந்தையுடன் பாரதிக்காக விஷம் குடிக்கும் வெண்பா...திட்டி தீர்க்கும் பாரதி

YouTube video player

இதை பார்த்த ரசிகர்கள் தன்னுடைய குழந்தையை தனது இல்லை என மனைவியை சந்தேகிக்கும் நாயகன் இவ்வாறு வேறொரு குழந்தைக்கு தந்தையாக சம்மதிப்பதா? என கடுப்பில் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.