Asianet News TamilAsianet News Tamil

Suriya new movie: சூர்யாவின் நடிப்பில் மீண்டும் சூரரைப் போற்று கூட்டணி...படத்தின் கதை இப்படிபட்டதா..?

Suriya new movie: சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

Suriya To Reunite With 'Soorarai Pottru' Director Sudha Kongara
Author
Chennai, First Published Apr 7, 2022, 12:32 PM IST

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.  

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்:

Suriya To Reunite With 'Soorarai Pottru' Director Sudha Kongara

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், திரைப்படம் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி  கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், வசூலில் 200 கோடியை கடந்து சாதனை படைத்தது.

பான் இந்தியா திரைப்படமாக வெளியான, எதற்கும் துணிந்தவன் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.  இந்த திரைப்படம் ரசிங்கர்கள் மட்டுமின்றி  பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.

Suriya To Reunite With 'Soorarai Pottru' Director Sudha Kongara

OTTயில் வெளியான இரண்டு படங்கள்:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் படம் எதற்கும் துணிந்தவன். கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்றபடங்கள் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி OTTயில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 

Suriya To Reunite With 'Soorarai Pottru' Director Sudha Kongara

கொரோனா காரணமாக OTTயில் வெளியான இந்த இரண்டு படங்களும், திரையரங்கில்  வெளியாகி இருந்தால் பெரிய அளவில் கலெக்ஷன் பெற்றிருக்கும் என்பது ரசிகர்களின் கவலையாக இருந்தது. மேலும், ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் மேடை வரை சென்று வந்தது குறிப்பிட்டத்தக்கது. 

சூர்யா-சுதா கொங்கரா  கூட்டணி:

Suriya To Reunite With 'Soorarai Pottru' Director Sudha Kongara

சூரரைப் போற்றின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவுள்ள இந்த திரைப்படம், யாருடைய வாழ்க்கை வரலாறும் கிடையாதாம். இது, மிக பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாக சுதா கொங்கரா கூறியுள்ளார். மேலும், இது குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....Beast: ரிலீஸுக்கு முன்பே முன்பதிவில்...முக்கிய இடத்தில் வசூல் சாதனை செய்த பீஸ்ட்...குஷியில் விஜய் ரசிகர்கள்..!

Follow Us:
Download App:
  • android
  • ios