பயாஸ்ட் கேப்டானாக இருக்கும் மாயா, தன் மீது தவறு உள்ளதை ஏற்றுக்கொண்ட போதிலும், பூர்ணிமா கமல்ஹாசனையே கலாய்த்துள்ளது தான் செம்ம ஹை லைட்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டின் உள்ளே முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில், வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற டாஸ்குகளை கொடுத்து, எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் தொடர்ந்த எண்ணெய் ஊற்றி வருகிறார் பிக்பாஸ்.
அந்தவகையில் இன்றைய தினம், பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் இடையே கோர்ட் டாஸ்க் வைக்கப்பட்டது. கடந்த முறை, போட்டியாளர்கள் வழக்கறிஞர்களாக மாறிவாதாடுவார்கள். ஆனால் தற்போது நடந்து வரும் கோர்ட் டாஸ்கில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவர்களே சரியான காரணத்தோடு விவாதிக்கவேண்டும். ஜர்ஜாக நிக்சன், ரவீணா ஆகியோர் தீர்ப்புகளை வழங்குகிறார்கள்.

இந்த டாஸ்கில் பூர்ணிமா, தினேஷ் மீது வைத்த குற்றச்சாட்டில் இருதரப்பு வாதத்தையும் கேட்டு ரவீணா தினேஷுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். ஏற்கனவே இந்த காண்டில் இருந்த புல்லி கேங் மீண்டும், தினேஷிடம் வந்து பில் பிரச்சனை குறித்து கத்தி சண்டை போடுகிறது. மாயா கையை அசைத்து சவுண்ட குறை என்பது போல் சைகை செய்தார். தினேஷும் கண்ட மேனிக்கு வார்த்தையை விடாமல் ரொம்ப டீசண்டாகவே சண்டை போட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், இந்த புரோமோவில் மாயா பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு ஆகியோருடன் பேசி கொண்டிருக்கும் போது, நம்ப மீதும் தவறு இருக்கு. இதற்கு கமல் சார் வார இறுதியில் கேள்வி கேட்பார் என மாயா கூற, பூர்ணிமா மிகவும் கூலாக கமல் சார் வந்து கேட்டா சாரி சார் என சொல்வதை தானே வழக்கமாக வைத்துள்ளோம் என தெரிவிக்கிறார். இதன் மூலம் கமல் சொன்னாலும் அதை நாங்கள் கேட்க மாட்டோம்... மீண்டும் மீண்டும் சாரி சொல்லுவோம் என்கிற தொனியில் தான் பூர்ணிமா பேசுவதாகவும், கமல் ஹாசனையே சீண்டி உள்ளதால் இந்த வாரம் செம்ம சம்பவம் இருக்கு என நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
